மக்கள் தீர்ப்பு மகத்தானது.. வளர்ச்சி, நல்லாட்சி வென்றது.. டெல்லி முடிவு குறித்து பிரதமர் மகிழ்ச்சி!

Feb 08, 2025,05:18 PM IST

டெல்லி: மக்கள் தீர்ப்பே மகத்தானது, அனைத்திலும் உயர்ந்தது. வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் வெற்றி கிடைத்துள்ளது என்று டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. கடந்த 27 வருடமாக அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறி வந்த பாஜக தற்போது மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளதுடன், அரவிந்த் கெஜ்ரிவால் என்ற சக்தியையும் தோற்கடித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு:



மக்கள் தீர்ப்பே மகத்தானது. வளர்ச்சி வென்றது, நல்லாட்சி வென்றது. 

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வெற்றியைக் கொடுத்த, டெல்லி சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள். நீங்கள் காட்டிய அன்புக்கும் வழங்கிய ஆசிர்வாதங்களுக்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெல்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பாடுபடுவோம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் உறுதி அளித்துள்ளோம். அத்துடன், வளர்ச்சி அடைந்த இந்தியாவில் டெல்லி முக்கியப் பங்காற்றுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.

இரவு பகலாக பாடுபட்டு இத்தகைய மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த பாஜகவினரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.  இப்போது நாம் டெல்லி மக்களுக்காக மேலும் வலிமையுடன் அர்ப்பணிப்புடன் பாடுபட முடியும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

news

மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!

news

இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி

news

கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?

news

காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?

news

மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்