டெல்லி : டெல்லி சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளது. தேர்தலுக்கு முக்கியமான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி யூனியன் பிரதேசத்தில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 ஆவது முறையாக இவர் முதல்வராக இருந்து வருகிறார். தற்போது செயலாற்றி வரும் டெல்லியின் 7வது சட்டசபையின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைகிறது. விரைவில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாகவே தேர்தலுக்கு தயாராக துவங்கி விட்டன அரசியல் கட்சிகள்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி டில்லி வாக்காளர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சிங் சுக்கு, அசோக் கெலாட் உள்ளிட்டோர் இந்த வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர். "பியாரி தீதீ யோஜ்னா" என்ற தலைப்பில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்:

1. டில்லியில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 அவர்களது வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.
2. ராஜஸ்தானத்தை போல் குடிமக்கள் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டு திட்டம்.
3. டில்லியில் வேலையில்லாத இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான உறுதி திட்டம்.
4. மீண்டும் டில்லியில் ரேஷன் முறை திட்டம் கொண்டு வரப்படும்.
5. டில்லி மக்களுக்கு 400 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}