விசாகப்பட்டினம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காலதாமதமாக பந்து வீசியதாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 தொடரின் 17ஆவது சீசன் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதில் டெல்லி அணி 17.2 ஓவர்களில் 106 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இப்போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய டெல்லி அணி மிகவும் மெதுவாக பந்து வீசியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் டெல்லி அணிக்கு 2வது முறையாக விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி, ஊதியத்தில் 12 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று ஐபிஎஸ் நிர்வாகம் தெரிவித்தது.
இதே போன்று இந்த முறையும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக கூறி டெல்லி அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது 2வது முறை என்பதால் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அல்லது ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}