டெல்லி: டெல்லியில் டூவீலரில் போன பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காருக்குள் சிக்கி அந்தப் பெண்ணின் உடல் கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட மேற்கு டெல்லியின் காஞ்சவாலா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான இளம் பெண் ஒருவர் நேற்று காலையில் ஸ்கூட்டியில் அப்பகுதியில் போய்க் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வேகமாக வந்த மாருதி பொலினோ கார் ஸ்கூட்டி மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பெண் காருக்கு அடியில் சிக்கிக் கொண்டார்.

விபத்தை ஏற்படுத்திய பின்னரும் தொடர்ந்து அந்தக் கார் நிற்காமல் போயுள்ளது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இறந்த பெண்ணின் உடலுடன் அக்கார் நிற்காமல் ஒன்றரை மணி நேரம் போயுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 13 கிலோமீட்டர் தூரத்திற்கு கார் போயுள்ளது. அதிகாலையில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தாஹியா என்பவர் கூறுகையில், சம்பவத்தைப் பார்த்தால் விபத்து போல தெரியவில்லை. விபத்தை ஏற்படுத்திய பின்னர் அந்தப் பெண் அடியில் சிக்கிக் கொண்ட நிலையில் கார் நிற்காமல் போனது. ஒரு சாலையில் யு டர்ன் எடுத்து மீ ண்டும் அதே சாலையில் சென்றது. மீண்டும் மீண்டும் யு டர்ன் எடுத்தது. அதைப் பார்க்கும்போது அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் நடந்த சம்பவம் போல இது தெரிகிறது என்றார்.
விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த தாஹியா காரை நிறுத்த முயன்றார். ஆனால் அது நிற்கவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டும் துரத்தியுள்ளார். அதன் பின்னரே போலீஸாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தற்போது அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}