டெல்லியின் 3வது பெண் முதல்வர்.. ஆம் ஆத்மியின் முதல் பெண் முதல்வர்.. யார் இந்த அதிஷி?

Sep 17, 2024,06:12 PM IST
டெல்லி: டெல்லியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அதிஷி மார்லெனா  சிங். இவர் டெல்லிக்கு மூன்றாவது பெண் முதல்வர் மட்டுமல்ல, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராகப் போகும் 3வது தலைவரும் கூட.

இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி),  பகவந்த் மான் (பஞ்சாப்) ஆகிய இருவர் முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்களது வரிசையில் 3வது முதல்வராக டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார் அதிஷி.





மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பணப்பரிமாற்றம் மாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கிலும் சமீபத்தில் ஜாமின் கிடைத்தது‌. இருப்பினும் அவர் முதல்வர் பதவியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதற்காக டெல்லி முதல்வர் இல்லத்தில் இன்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவால் புதிய முதல்வராக அதிஷியை முன்மொழிந்ததைத் தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒருமனதாக  ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக அதிஷி பொறுப்பேற்கவுள்ளார்.

யார் இந்த அதிஷி..?





1981 ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் தேதி டெல்லியில் பிறந்தவர் அதிஷி மார்லெனா சிங். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பும் பயின்றுள்ளார். இவருடைய தந்தை விஜய் சிங் டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தாய் திரிப்தா சிங். ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி உருவாக்கத்திற்கு முக்கிய பங்கு வகித்தவர். அப்போது 2015 ஆம் ஆண்டு முதல் மணீஸ் சோடியாவின் ஆலோசகராக செயல்பட்டவர். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதன் முதலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்போது 47 வயதாகும் அதிஷி  கல்காஜியின் எம்.எல்.ஏ.வாகவும், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருவதுடன், டெல்லி அரசில் கல்வி, பொதுப்பணித்துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்த காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்ததாகவும், இதனால் அதிஷிக்கு கட்சியின் ஆதரவு வலுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி ஜில் ஜில் கிளைமேட் தான்.. தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்குமாம்.. வானிலை மையம் கணிப்பு..!

news

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!

news

IPL 2026.. CSKவில் யாருக்கெல்லாம் கெட் அவுட்.. யாரெல்லாம் நீடிப்பாங்க?.. A quick analysis!

news

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்..‌ நாளை போர்க்கால ஒத்திகை.. மத்திய அரசு அறிவிப்பு!

news

இந்தியாவுடன் மோதல் போக்கு.. பாகிஸ்தான் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.. மூடிஸ் எச்சரிக்கை

news

நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!

news

இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

news

தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களில்.. டமால் டுமீலுடன் மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்

news

கொளுத்தும் கோடை காலத்தில்.. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன குடிக்கலாம்..?

அதிகம் பார்க்கும் செய்திகள்