டெல்லி: டெல்லியில் நடந்த மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியின்போது முதல்வர் ரேகா குப்தாவை, குஜராத்தைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என்ற நபர் திடீரென தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரேகா குப்தா அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளரா்.
ஜன்சுன்வாய் எனப்படும் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. அப்போது முதல்வர் ரேகா குப்தா மக்களிடமிருந்து குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதல்வரை அணுகி அவரைத் தாக்கினார். மனுதாரர் போல் வேடமிட்டு வந்த அந்த நபரை, முதல்வரின் பாதுகாப்புப் பணியாளர்கள் உடனடியாக மடக்கிப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். முதற்கட்ட தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ராஜேஷ் சக்காரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதல்வர் ரேகா குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கமிஷனர் எஸ்.பி.கே.சிங் நேரடி பார்வையில் விசாரணை நடைபெறவுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை பாஜக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம் ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான அதிஷியும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தில், கருத்து வேறுபாடுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடமுண்டு, ஆனால் வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளி மீது டெல்லி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}