பொய் வழக்கில் என்னைக் கைது செய்தது பாஜக.. செய்தியாளர்களிடம் உடைந்து அழுத கெஜ்ரிவால்

Feb 27, 2026,06:05 PM IST

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்துள்ளது. 


சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், எந்த ஒரு ஆதாரமும் இடம் பெறவில்லை. அவை வெறும் காகிதங்களே. இது ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கு என்றும் டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் உடைந்து போய் அழுதார்.


டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட அவர் சிறையில் இருந்தபடியே சில காலம் முதல்வர் பதவியையும் வகித்து வந்தார்.




இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கில் எந்தவொரு சதித் திட்டமும் நடந்ததற்கான சான்றுகள் இல்லை. சிபிஐ-யின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்ட வழக்காக இது இருக்கிறது. குற்றப்பத்திரிகை பெரிதாக இருக்கிறதே தவிர அதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை, வெற்றுக் காகிதங்களாகவே அவற்றைப் பார்க்க முடிகிறது என்று கடுமையாக விமர்சித்தது.


அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர்


நீதிமன்றம் தன்னை நிரபராதி என்று அறிவித்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் மனிஷ் சிசோடியாவும் ஒரு பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்கள் மீது சேறு பூசப்பட்டது. இன்று உண்மை வென்றுள்ளது. நான் மிகவும் நேர்மையானவன். கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்றார் கெஜ்ரிவால்.


2021-22 ஆம் ஆண்டு டெல்லி அரசு (கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது) கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, 2024 மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிபிஐ-யும் இந்த வழக்கில் அவரைக் கைது செய்தது. சுமார் 6 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு 2024 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த சில நாட்களிலேயே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.


இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்த கெஜ்ரிவாலுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


கெஜ்ரிவால் கைதுக்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பின்னடவைச் சந்தித்தது. அதேபோல டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் பெரும் தோல்வியை ஆம் ஆத்மி கட்சி சந்தித்தது. தற்போது வந்துள்ள தீர்ப்பைத் தொடர்ந்து கெஜ்ரிவால் மீண்டும் அதிரடி காட்டத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்