ஆட்டிப்படைக்கும் குளிர்.. டெல்லி சிறைக் கைதிகளுக்கு குளிக்க சுடு தண்ணீர் தர உத்தரவு!

Jan 10, 2023,09:32 AM IST
டெல்லி: டெல்லியில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்குள்ள சிறைக் கைதிகள் குளிப்பதற்கு சுடு தண்ணீர் தர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனா உத்தரவிட்டுள்ளார்.



டெல்லி சிறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் துணைநிலை ஆளுநர் சக்ஸேனா தலைமையில் நடந்தது. அப்போது டெல்லியில் நிலவி வரும் கடும் குளிரைத் தொடர்ந்து சிறைக் கைதிகள் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்து சில உத்தரவுகளை ஆளுநர் பிறப்பித்தார்.

டெல்லி திகார், ரோஹினி மற்றும் மண்டோலியில் உள்ள 16 சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குளிப்பதற்கு சுடு தண்ணீர் தர வேண்டும்.. 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு கம்பளி போர்வை தரப்பட வேண்டும். தற்போது கைதிகளுக்கு மரக்  கட்டில் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வசதியான கைதிகள் சுடுதண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் குளிக்கின்றனர். ஆனால் சாமானியக் கைதிகளால் அது முடியவில்லை என்பதால் அவர்கள் கடும் குளிரில் நடுங்கியபடி பச்சைத் தண்ணீரில் குளிக்கும் நிலை உள்ளது. அல்லது குளிக்காமலேயே இருக்கும் சூழலும் ஏற்படுகிறது. இதனால் சுகாதாரப் பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அனைவருக்கும் சுடு தண்ணீர் தர துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. வெளியில் பனிமூட்டமும் அதிகமாக இருக்கிறது. வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டும் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்