டெல்லி : டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் அடர் பனிமூட்டம் காரணாக 400 க்கும் அதிகமான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
டெல்லியில் அடர் பனிமூட்டம் காரணமாக மிக மோசமான காலநிலை நிலவுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மிக குறைந்த அளவிலேயே எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடிகிற நிலை உள்ளது. டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. வானத்தை அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் விமான சேவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திற்கு வர வேண்டிய 19 விமானங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இவற்றில் 13 விமானங்கள் உள்நாட்டு விமானங்கள் என்றும், 4 சர்வதேச விமானங்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 400 க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விமானப் பயணிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 45 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக டில்லி விமான நிலையம் அறிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், தங்களின் விமானங்கள் டில்லிக்கு வருவதையும், டில்லியில் இருந்து புறப்படுவதையும் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக நேற்று காலை அறிவித்தது. பல விமானங்கள் புறப்படும் நேரம் சரியாக தெரியாததால் விமான பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே வாட்டும் குளிரில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள், தங்களின் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமான பயணத்தின் நிலை என்ன என்பது குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என டில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டில்லியில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மிக அடர்ந்த நிலையில் பனிமூட்டம் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலார்ட் விடுத்துள்ளது.குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசை தொடலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்ட நிலையில் இன்று சற்று குறைவு!
ஜோர்டானில் பிரதமர் நரேந்திர மோடி.. 2 நாள் சுற்றுப்பயணத்தில் என்னவெல்லாம் காத்திருக்கு?
365 நாட்களும் கவிதை.. வீடு தேடி வரும் சான்டாவின் சர்ப்பிரைஸ் பரிசுகள்.. கலக்கும் Creative Writers
{{comments.comment}}