உலகிலேயே மிகப் பெரிய மியூசியம்.. எது தெரியுமா.. இதுதான்!

Jul 28, 2023,04:09 PM IST
டெல்லி: உலகிலேயே மிகப் பெரிய மியூசியம் என்ற பெருமையைப் பெறவுள்ள மிகப் பிரமாண்டமான மியூசியம் டெல்லியில் உருவாகிறது.

இந்தியாவின் 5000 ஆண்டு கதையை சொல்லும் அருங்காட்சியமாக இது திகழப் போகிறது. Yuge Yugeen Bharat National Museum என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசியம்,  மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சரகங்கள் அமைந்துள்ள தெற்கு மற்றும் வடக்கு பிளாக் பகுதியில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் 950 அறைகள் இருக்கும்.



தரைத் தளம் தவிர மேலும் 3 மாடிகளுடன் கூடியதாக இந்த பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச மியூசிய தினம் கடந்த மே 18ம் தேதி கொண்டாடப்பட்டபோது இந்த மியூசியத்தின் விர்ச்சூவல் பார்வை தளத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Yuge Yugeen Bharat National Museum அருங்காட்சியகத்தில் 8 பிரிவுகள் அமையவுள்ளன. இவை இந்தியாவின் பழமையான கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை விளக்கும் வகையில் அமையும். பண்டைய இந்தியா முதல் நவீன இந்தியா வரை அனைத்து வகையான இந்தியாவையும் புரிந்து கொள்ளும் வகையிலான அருங்காட்சியகமாக இது இருக்கும்.

இந்தியாவை ஆண்ட மன்னர்கள், சாம்ராஜ்ஜியங்கள் உள்ளிட்டவை குறித்தும் இங்கு அறிய முடியும். ஜன்பாத் பகுதியில் உள்ள தேசிய மியூசியத்தில் (இது ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டதாகும்) இடம் பெற்றுள்ள அனைத்துப் பொருட்களும் புதிய மியூசியத்திற்கு மாற்றப்படும்.

தெற்கு பிளாக்கில்தான் பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆகியவை அமைந்துள்ளன. வடக்கு பிளாக்கில் நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்