சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு பரவி வருவதால் மக்கள் சற்று கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அறிவுறுத்தி வவருகிறது.
தற்போது, டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளது.
மருத்துவ துறையினர், சுகாதார பணியாளர்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பருவ கால தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நோயின் தீவிரத்தை பொருத்து நோயாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களும் தங்களது வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் வரையிலான சூழலைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}