பிறந்த நாளின்போது.. பிளக்ஸ் பேனர்கள், பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

Nov 25, 2024,05:54 PM IST

சென்னை: என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு, பிளக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


நவம்பர் 27ம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளாகும். இதை ஆடம்பரமாக கொண்டாட உதயநிதி விரும்பவில்லை. இதுதொடர்பாக அவர் கட்சியினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:




வருகிற நவம்பர் 27ஆம் தேதி என் பிறந்தநாள் வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத்துக்கு 100 இளம் பேச்சாளர்களை தேர்ந்தெடுத்து தாருங்கள் என்று கழகத் தலைவர் அவர்கள் கழக இளைஞர் அணிக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றும் விதமாக, நடத்தப்பட்ட 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறியும்போது, உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். 


மேலும், ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த தலைமைக்கழகப் பேச்சாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், இந்த இளம் பேச்சாளர்கள் மென்மேலும் பட்டை தீட்டப்படுகிறார்கள் என்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.


என்னை பொறுத்தவரை பிறந்தநாள் என்பது மற்ற நாட்களைப் போலவே அதுவும் ஒரு நாள்தான். ஆனால், இளைஞர்கள் அணி செயல் வீரர்கள் உள்ளிட்ட கழகத் தோழர்களும் என்னை தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்களும் காட்டும் பேரன்பும் ஆதரவுமே என் பிறந்த நாளைச் சிறப்பான நாளாக மாற்றி இருக்கிறது.


திருமண விழாக்களைத் தங்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் வாய்ப்பாக கருதி, அதையே கொள்கைவிளக்க நிகழ்வாக மாற்றிக்காட்டியது. நமது திராவிட இயக்கம், அதே வகையில் தான் தங்கள் பிறந்தநாள் விழாக்களையும் இயக்கத்துக்கான கொள்கை திருவிழாவாக மாற்றிக் காட்டியவர்கள் நம் திராவிட இயக்க முன்னோடிகளான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், நமது கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறந்த நாளையும் கொள்கை திருவிழாவாகவே நம் கழகத் தோழர்கள் கொண்டாடுகிறார்கள்.


அந்தவகையில், என் பிறந்தநாளை கொண்டாட விரும்பும் கழகத் தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கு கழகப் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, என் விருப்பம். முன்பே சொன்னது போல், இயக்கத்தின் கொள்கைகளையும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்துவதில், கழகத் தோழர்கள் முனைப்பு காட்ட வேண்டும். அதேபோல் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட, போற்றுதலுக்குரிய நம் கழக முன்னோடிகளை நேரில் கண்டு அவர்களை உரிய வகையில் கௌரவிக்க வேண்டும் என்று, நம் இளைஞர் அணி தோழர்களை கேட்டுக்கொள்கிறேன்.


ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப ஏழை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளையும் கழகத் தோழர்கள் நடத்த வேண்டும். ஏற்கனவே, நம் திராவிடம் மாடல் அரசால் பலன்பெறும் அடித்தட்டு மக்களுக்கு அத்தகைய உதவிகள் மேலும் பலம் சேர்க்கும் என்பதால் அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவது கழகத் தோழர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். அதேபோல் பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சூழல் வந்தால் நிவாரண பணிகளை மேற்கொள்வதில் இளைஞர் அணி செயல் வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.


முக்கியமாக ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். என் பிறந்த நாளை முன்னிட்டு பிளக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அவற்றைத் தவிர்த்து விட்டு, மேற்கண்ட ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் கழகத்தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழிப்பிதுங்கி கொண்டிருக்கும் போது, நாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளை தொடங்கிவிட்டோம். 2026 இல் வெற்றி பெற்று கழகத் தலைவர் அவர்களின் தலைமையிலான திராவிடம் மாடல் அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை இந்த பிறந்த நாளில் என்னுடன் சேர்ந்து கழகத் தோழர்களும் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்