தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீர் இன்றி அமையாது இவ்வுலகம் என்பது போல நீர் மனித வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பண்டைய காலங்களில் எல்லாம் நீரை சேமித்து வைத்து அதனை பயன்படுத்தி வந்தனர். ஏரி, குட்டை, குளம், ஆறு இவை எல்லாம் நீர் ஆதார இடங்களாக இருந்து வந்தது. தற்போதைய காலத்தில் நீர் சேமித்து வைக்கும் இடங்களில் எல்லாம் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருவதால், மழை காலங்களில் பெய்யும் மழை நீர் போவதற்கு இடம் இன்றி கழிவுநீர்களில் கலந்து யாருக்கும் பயன்படாமல் போகின்றன.

நீரின் சிக்கனத்தை யாரும் பின்பற்றுவதும் இல்லை. பூமிக்கடியில் பல நூறு அடி குழி தேண்டி நீரை உறிஞ்சி கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்தும் வருகின்றனர். இவ்வாறு செய்வதினால் நிலத்தடி நீரும் வெகுவாக குறையத்தொடங்கியுள்ளன.இந்த நிலத்தடி நீர் குறைந்து வருவதினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஒரு இடங்களில் இதனால் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி தத்தளித்து வருகின்றனர்.
பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட தொடங்கி விட்டது. கோடை காலத்தில் மட்டும் இருந்த இந்த தட்டுப்பாடு தற்பொழுது பரவலாக அனைத்து காலங்களிலும் தொடங்கி விட்டன. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தற்போது கடல் நீரையும் குடிநீராக்கும் திட்டம் அமல்படுத்தப்பட ஆரம்பித்துள்ளது. சென்னை அருகே மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மறைந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலைியல் தற்பொழுது தூத்துக்குடியில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான டெண்டர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
முதன் முதலாக தூத்துக்குடி மாட்டம், முள்ளக்காடு கிராம் பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அரசு தனியார் பங்களிப்பு முறையில் அமைக்க இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்காக முள்ளக்காடு கிராமத்தில் ரூ.904 கோடியில் இதனை செயல்படுத்த டெண்டர் கோரியுள்ளது சிப்காட். அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}