ஈரோடு தேர்தலை ரத்து செய்யுங்க...தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்த தேமுதிக

Feb 21, 2023,03:01 PM IST
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தலுக்கு தடை கேட்டு அடுத்தடுத்த கட்சிகள் மனு அளித்து வருகின்றன.



ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாகவும், அது தொடர்பாக புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கும் வரை தேர்தலை நடத்த அனுமதி வழங்கக் கூடாது. தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்ட கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட், அதை தள்ளுபடி செய்துள்ளது.




இந்நிலையில் ஈரோடு தேர்தலை ரத்து செய்யக் கோரி, தேமுதிக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு தேர்தலில் பண பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்