"பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. விரைவில் வெளிப்படுவார்".. பழ. நெடுமாறன் பரபர தகவல்!

Feb 13, 2023,11:45 AM IST
தஞ்சாவூர் : தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவர் கூறுகையில், தேசிய தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக இலங்கை மக்கள் வெடித்து எழுந்து போராட்டம் நடத்தும் இந்த சூழலில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையாக இருக்கும். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி. 

அவரை பற்றி இதுவரை பரப்பப்பட்ட யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இது முற்றுப்புள்ளியாக அமையும். தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க உள்ளார். தமிழின மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக இலங்கையை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.



இந்திய பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தும் அபாய நிலை உள்ளது. இதனால் தமிழக மக்கள், பிரபாகரனுக்கு துணை நிற்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு உள்ளது. அந்த தொடர்பின் மூலம் நான் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அவர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்ற ஆர்வம் எனக்கும் உள்ளது. ஆனால் அவர் விரைவில் வெளிப்படுவார் என தெரிவித்தார்.

2009 ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரின் போது இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கொல்லப்பட்ட இலங்கை அரசு அறிவித்தது. பிரபாகரனின் மரணத்திற்கு பிறகு இலங்கையில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது. விடுதலை புலிகள் இயக்கம் தற்போது இலங்கையில் கிடையாது என்று கூட அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்நிலையில் கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரபாகரன் தற்போதும் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்