மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து... "சி.எம்முடன் செல்ஃபி".. திமுகவின் தடபுடல் கொண்டாட்டம்

Mar 01, 2023,09:39 AM IST
சென்னை : தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர் திமுக தொண்டர்கள். இதற்காக கடந்த 2 நாட்களாகவே திமுக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



முதல்வர் ஸ்டாலினின் 70 வது பிறந்த நாள் மார்ச் 01 ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு சென்னையில் அன்பகம், பெரியார் திடல் உள்ளிட்ட பல இடங்களில் 70 அடி உயரத்தில், திராவிட நாயகன் என்ற வாசகம் மற்றும் ஸ்டாலின் புகைப்படத்துடனான பலூன்கள் பறக்கப்பட்டுள்ளது.




கட்அவுட், பேனர், போஸ்டர் என தொண்டர்கள் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள் என்றால், திமுக ஐடி பிரிவு சார்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது, திமுக ஆட்சியின் சாதனைகள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாகவும் ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு முறைகளை திமுக தொழில்நுட்ப பிரிவு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கட்சி தொண்டர்கள், வெளி மாவட்டம், வெளி மாநிலம் என இந்தியா முழுவதிலும் இருந்து முதல்வரின் நலம் விரும்பிகள் வாழ்த்துக்களை பகிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

போனில் வாழ்த்து :

07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு,  மக்கள் தங்கள் குரலில் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து அனுப்பலாம். லட்சக்கணக்கான மக்கள் முதல்வருக்கு வாழ்த்து சொல்ல வசதியாக ஸ்மார்ட் போன் இல்லாமல் சாதாரண போனை பயன்படுத்தி வாழ்த்து சொன்னாலே பதிவாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் பிப்ரவரி 28 ம் தேதி துவங்கி மார்ச் 2 ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.



சிஎம்., உடன் செல்ஃபி :

இரண்டாவது முறையில் முதல்வர் ஸ்டாலினுடன் செல்ஃபி என்ற புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வாழ்த்து தெரிவிக்கலாம். www.selfiewithCM.com என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் இணைக்கப்பட்டுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தால் முதல்வர் ஸ்டாலினின் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி போட்டோக்கள் காண்பிக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான போட்டோவை தேர்வு செய்து, அதனுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோவை தனிநபர் அல்லது சோஷியல் மீடியா குரூப்பில் பதிவேற்றம் செய்து முதல்வர் மீதான தங்களின் அன்பை தெரியப்படுத்தலாம்.

தலைவர்கள் வாழ்த்து:

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தேசியத் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேற்று முதலே வாழ்த்தி வருகின்றனர்.

இதற்கிடையே, 70வது பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின், இன்று தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார். பசுமையான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்பதையும், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை வலியுறுத்தியும் இதனை முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ளார் என்று திமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்