நாளை சூரிய புயல் பூமியை தாக்குமா?.. பகீர் கிளப்பும் நாசா

Jul 12, 2023,11:17 AM IST
நியூயார்க் : ஜூலை 13 ம் தேதியான நாளை சூரிய புயல் பூமியை தாக்கலாம் என நாசா எச்சரித்துள்ளது. இது பூமியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சூரிய புயலால் வளி மண்டல அடுக்கில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படலாம் என்றும், வட அமெரிக்காவின் பல பகுதிகள் இந்த சூரிய புயலால் பாதிக்கப்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது. மைனரான ஜி1 புவிகாந்த புயலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஸ்பேஸ் வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புவியில் காந்தவியல் தன்மையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவம் சொல்லப்படுகிறது. 



அமெரிக்காவின் வாஷிங்டன், அலாஸ்கா, நியூயார்க், மிச்சிகன், இண்டியானா, மெரிலாந்து உள்ளிட்ட 13 அமெரிக்க மாகாணங்களில் இந்த சூரிய புயலை உணர முடியும். இதனால் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இணையதள சேவையில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல எலக்ட்ரானிக் மின்னணு சாதனங்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இந்த சூரிய புயலின் தாக்கம் அமெரிக்கா தவிர வேறு எந்தெந்த நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி நாசா எந்த தகவலையும் வெளியிடவில்லை. இது வளிமண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் காற்றின் தன்மைகளில் மாறுபாடு ஏற்படலாம். அதோடு பூமியின் கிழடுக்கு நீள்வட்ட பாதையில் இருக்கும் செயற்கைக் கோள்களையும் இது பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்