மாஸ்டர் இவர் நடிக்க வேண்டிய படமா ?.. தரமான சம்பவம் மிஸ் ஆகிடுச்சே

Feb 21, 2023,11:44 AM IST
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த பிளாக் பஸ்டர் படம் மாஸ்டர். 2021 ம் ஆண்டு ரிலீசான இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக ரிலீசாகி இருந்தது. 



கிட்டதட்ட ரூ.220 கோடி முதல் 300 கோடி வரை வசூல் ஆன மாஸ்டர் படத்தில், டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியை முதல் முறையாக வில்லனாக அறிமுகம் செய்து வைத்தார் லோகேஷ் கனகராஜ். விஜய்- விஜய் சேதுபதி காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

முக்கிய கேரக்டர்களில் நடித்த விஜய், விஜய் சேதுபதி மட்டுமல்ல, சப்போர்டிங் கேரக்டர்களில் நடித்த மாஸ்டர் மகேந்திரன், அர்ஜூன் தாஸ் ஆகியோரின் கேரக்டர்களும் பெரிய அளவில் பேசப்பட்டன.


சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்களுக்கும் கூட பெயர், புகழை தேடி தந்து, பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது மாஸ்டர் படம். அனிருத்தின் இசையில் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி போன்ற பாடல்கள் படம் ரிலீசாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே மாஸ் ஹிட் அடித்து, யூட்யூப்பில் புதிய சாதனை படைத்தன.

ஆனால் லேட்டஸ்டாக கசிந்துள்ள தகவலின் படி, ரசிகர்களை கொண்டாட வைத்த மாஸ்டர் படத்திற்கு ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் கிடையாதாம். இந்த கதையை அல்டிமேட் ஸ்டார் அஜித்தை மனதில் வைத்து தான் லோகேஷ் கனகராஜ் உருவாக்கினார் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த சமயத்தில் அஜித், வலிமை பட வேலைகளில் பிஸியாக இருந்தாராம். 

கொரோனா பரவ துவங்கிய நேரம் என்பதால் வலிமை படத்திற்கு வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டிய ஷூட்டிங்கிற்கு அடுத்தடுத்து அனுமதி மறுக்கப்பட்ட, ஷூட்டிங் தொடர்ந்து தாமதமாக, படத்தின் வேலைகள் முடிக்கப்படாமல் இருந்தார் அஜித். ஒரு படத்தின் வேலைகளை முடிக்காமல் அடுத்த படத்தில் கமிட்டாவதில்லை என கொள்கை வைத்திருப்பவர் அஜித். அதனால் வலிமை படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்திலும் கமிட்டாக விரும்பாததால் மாஸ்டர் படத்தில் பிறகு நடிப்பதாகவும், கொஞ்ச காலம் பொறுக்க வேண்டும் என லோகேஷிடம் கூறினாராம்.

ஆனால் வலிமை படத்தை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்ற நிலைமை வந்ததால் வேறு இல்லாமல் தனது கதையில் சிறிய மாற்றங்களை செய்து, விஜய்யிடம் பேசி படத்தை முடித்தாராம் லோகேஷ். இதனால் லோகேஷின் அடுத்தடுத்த ஸ்கிரிப்ட்களில் அஜித்திற்கும் ஒரு கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தில் அஜித் நடித்திருந்தால், அஜித் - விஜய் சேதுபதி காம்போவில் படம் வேற லெவலில் இருந்திருக்கும். மிஸ் பண்ணி விட்டோமே அஜித் ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்