இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன், சி.பி. ஆர்.. ஆளுநராகும் 3வது தமிழ்நாடு பாஜக தலைவர்!

Feb 13, 2023,02:15 PM IST
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்தவர்களுக்கு அடுத்தடுத்து ஆளுநர் பதவியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. 



நாடு முழுவதும் 13 புதிய ஆளுநர்களை நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்தார். இதில் பலர் பாஜக தலைவர்களாக இருந்தவர்கள்.  பாஜகவின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் இவர்கள். அப்துல் நசீம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். முக்கியமான அயோத்தி உள்ளிட்ட தீர்ப்புகளில் பாஜகவுக்கு சாதகமான தீர்ப்பைக் கொடுத்தவர்.

ஆளுநர்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர். மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். 2 முறை எம்.பியாகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டு பாஜக தலைவர் ஒருவர் ஆளுநர் பதவிக்கு வருவது இது முதல் முறையல்ல.

இந்த வரிசையை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் இல. கணேசன்தான். அவர்தான் தமிழ்நாடு பாஜகவிலிருந்து ஆளுநராக உயர்ந்தவர். முதலில் மணிப்பூர் மாநில ஆளுநராக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார் இல.கணேசன். 



இவருக்கு அடுத்து இந்தப் பெருமையைப் பெற்றவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். இவர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர். இல.கணேசன் ஆரம்பித்து வைத்த கட்சி மலர்ச்சியை தொடர்ந்து தூக்கிப் பிடித்து தமிழ்நாடு பாஜகவை வேற லெவலுக்கு மாற்றிய பெருமை தமிழிசைக்கே உண்டு. தாமரை மலர்ந்தே தீரும் என்று இவர் அடித்துச் சொன்ன வாசகம் அகில இந்திய அளவில் பிரபலமானது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி நிறுத்தப்பட்டார். மிகக் கடுமையாக போராடியும் கூட தமிழிசை தோல்வியைத் தழுவினார். இந்த தோல்வி தந்த வருத்தத்தில் இருந்த அவரை தெலங்கானா மாநில ஆளுநராக்கியது மத்திய பாஜக அரசு. அதன் பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கொடுத்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது சி.பி.ராதாகிருஷ்ணன் இணைந்துள்ளார். மேற்கண்ட 3 பேருமே தமிழ்நாடு பாஜக தலைவர்களாக இருந்தவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதமான முத்திரையைப் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பாஜகவில் இவர்களைப் போலவே உள்ள சில மூத்த தலைவர்களில் எச். ராஜாவும் ஒருவர். அவருக்கும் ஏதாவது ஆளுநர் பதவி கிடைக்குமா அல்லது தொடர்ந்து எந்தப் பதவியும் இல்லாமல் பாஜகவிலேயே அவர் தொடருவாரா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்