லோக்சபா தேர்தல் 2024.. நாட்டை 7 மண்டலமாக பிரித்து.. காங்கிரஸின் பலே  உத்தி!

Feb 25, 2023,11:35 AM IST
டெல்லி: லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் பிரமாண்ட திட்டங்களுடன் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டை 7 மண்டலமாக பிரித்து பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக டெக்கான் ஹெரால்டு செய்தி தெரிவிக்கிறது.



நாடாளுமன்றத்துக்கு 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலோடு சேர்த்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

லோக்சபா தேர்தலுக்காக முக்கியக் கட்சிகள் அனைத்தும் தயாராக ஆரம்பித்து விட்டன. குறிப்பாக பாஜக,காங்கிரஸ், பிற தேசியக் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தத் தேர்தலில் யார் வலுவான கூட்டணி அமைப்பார்களோ அவர்களுக்குத்தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.  எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால் நிச்சயம் பாஜகவை வெல்லலாம் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் நம்புகிறார்கள்.




இருப்பினும் இதுவரை அனைவரும் ஒன்றிணைந்து நிற்பார்களா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைப்பதில் சில முக்கிய கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது. குறிப்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ் தலைமையில் நிற்குமா என்று தெரியவில்லை. மமதா பானர்ஜி இப்போது கிட்டத்தட்ட சைலன்ட்ஆகி விட்டார். முன்பு போல அவர் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை, ஆவேசம் காட்டுவதும் இல்லை. இப்படி பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி  தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. அதற்காக அது ஒரு பிரமாதமான திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது பிராந்திய வாரியாக மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் பிரித்து 7 மண்டலமாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பிரச்சார உத்தி கையில் எடுக்கப்படும்.

உதாரணத்திற்கு - தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவு ஆகியவை இணைந்து ஒரு மண்டலம். இந்த மண்டலத்திற்கு தனியாக பிரச்சார உத்தி வகுக்கப்படும். இந்த பகுதிக்குட்பட்ட எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சித் தலைவர்கள் இணைந்து இதற்கான திட்டங்களை வகுப்பார்கள்.  இந்த மாநிலங்களின் பொதுப் பிரச்சினைகள் ஒருங்கிணைக்கப்படும். இதேபோல பிற மண்டலங்களிலும் உத்திகள் வகுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் இந்தப் பிரச்சார உத்தி எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பது தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

சமீபத்திய செய்திகள்

news

உதயா உதயா உளறுகிறேன்.. விரிவடையும் திசையெங்கும் தொடர்கிறது ஒரு மௌனப் பயணம்!

news

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி

news

Education: தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலைக்கு எப்போதுதான் விமோச்சனமோ?

news

Short Story: ஐந்து விளக்குகள், ஒரே வீடு!

news

திருச்சி சமயபுரம் மாரியம்மன் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு

news

TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதல்

news

புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது

அதிகம் பார்க்கும் செய்திகள்