டிவிட்டர் வழியில் மெட்டா.. பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு காசு கொடுத்தால் ப்ளூ பேட்ஜ்!

Feb 20, 2023,11:46 AM IST
சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமீபத்தில் ப்ளூ டிக் முத்திரை பெறுவதை கட்டண சேவையாக மாற்றியது போல, மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் ப்ளூ பேட்ஜ் முத்திரயை கட்டண சேவையாக்கியுள்ளது.



ஞாயிற்றுக்கிழமை இந்த கட்டணச் சேவை அமலுக்கு வந்துள்ளதாக மெட்டாவின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பர்க் தெரிவித்துள்ளார். "மெட்டா வெரிபைட்" என்ற இந்த சேவையை தொடங்கி வைத்த அவர் கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த சேவையைப் பெறுவதற்கான கட்டணம் மாதம் 11.99 டாலர் ஆகும்.



எங்களது சேவையை மேலும் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றும் முயற்சியே இந்த கட்டண அறிமுகம் என்று கூறியுள்ளார் மார்க்.  இந்த வாரம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இது அறிமுகமாகிறது. அடுத்து அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் அமலுக்கு வருமாம். ஏற்கனவே வெரிபைட் ஆனவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல வர்த்தக ரீதியிலான கணக்குகளுக்கு இந்த புதிய திட்டம் பொருந்தாது.

பேஸ்புக் நிறுவனம் ஒரு காலத்தில் முற்றிலும் இலவசமானதாக அறிவிக்கப்பட்டு எப்போதும் அது இலவசமாகவே இருக்கும் என்றும் மார்க் சக்கர்பர்க் பெருமிதத்துடன் கூறி வந்தார். பேஸ்புக் மற்றும் கூகுளுக்கு மிகப் பெரிய அளவில் விளம்பரங்கள் மூலம் வருமானமும் கிடைத்து வந்தது. ஆனால் 2019ம் ஆண்டுக்குப் பிறகு பேஸ்புக்கின் முகம் மாறிப் போனது. இலவசம் என்ற வார்த்தையை மெல்ல மெல்ல கைவிட ஆரம்பித்தார் மார்க். 

2022ம் ஆண்டு மெட்டா நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக பெரும் சரிவைச்சந்தித்தது. 2012ம் ஆண்டுக்குப் பிறகு அது சந்தித்த முதல் வருவாய் சரிவு இதுதான். மேலும் டிக்டாக் உள்ளிட்டவற்றின் வளர்ச்சியால் பேஸ்புக் பெரும் அடி வாங்க ஆரம்பித்தது.  இதையடுத்து ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மார்க் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக கடந்த நவம்பர் மாதம் அவர் அறிவித்தார். இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்