கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு.. தமிழக அரசு கண்டிக்காதது அதிர்ச்சி தருகிறது .. தினகரன்

Feb 18, 2023,09:57 AM IST

சென்னை: கர்நாடக வனத்துறை நடத்திய  சட்டவிரோதமான துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பலியான சம்பவம் தொடர்பாக இத்தனை நாட்களாகியும் தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். 


சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து கூலிங் கிளாஸ்.. புனே நிறுவனத்தின் "கூல் கூல்" கண்டுபிடிப்பு!


மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கி சுட்டதாக வனத்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஒருவேளை மீனவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர துப்பாக்கி சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது. 


இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  


ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று தினகரன் கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

news

விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

அதிகம் பார்க்கும் செய்திகள்