தேவகோட்டை: கற்றுக் கொள்ளும் யாவருமே மாணவர்கள்தான்.. அப்படிப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது போன்ற அருமையான அனுபவம் எதிலுமே கிடைக்காது.. இது எப்படி அது எப்படி. இது என்ன அது என்ன என்று கேட்டு கேட்டு தெளிவு பெறுவதில் மாணவர்களுக்கு நிகர் மாணவர்களே.
இப்படிப்பட்ட நிலையில் அரசு தோட்டக்கலைப் பண்ணை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், கேள்விகளால் ஆச்சரியப்படுத்தி திணறடித்து விட்டார்கள்.
இந்த முகாமின்போது கத்திரிக்காய் பறிக்கவும், விவசாயம் என்றால் என்ன என்றும் மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மாணவிகள் டிராக்டரும் ஓட்டி அசத்தினர். மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்த அதிகாரியே அசந்து போய் விட்டார் என்றால் பார்த்துக்கங்களேன்.
தேவகோட்டையில் உள்ள அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக சென்றனர். தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப் பயணம் மேற்கொண்டனர் மாணவர்கள். அவர்களை அரசு தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் ராம் பிரசாத் வரவேற்றார்.
மாணவர்களுக்கு முதலில் மல்லிகை, கத்தரி, மாமரம், புளியமரம், முந்திரி, பூவரசு, கொய்யா, அரளி போன்ற செடிகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார். பிறகு குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும் விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல், மென்தண்டு ஒட்டு, நெருக்கு ஒட்டு, கவாத்து செய்தல் எப்படி என்பதை நேரடியாக தோட்டக்கலை பண்ணை உதவி அலுவலர் மாயவேல் விளக்கினர்.
மாணவர்களும் இதனை அங்கு நேரடியாக செய்து பழகினர். ஆசிரியர் ஸ்ரீதர் பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து சென்றார். இன்றயை நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்களை நேரடி களப் பயணத்தின் வாயிலாக விழிப்புணர்வு அடைய செய்தது மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.
அனைத்து மாணவர்களுக்கும் டிராக்டர் ஓட்டவும் கற்று கொடுக்கப்பட்டது. டிராக்டர் ஒட்டியது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்று மாணவர்கள் கூறினார்கள். தேனீ பெட்டி பார்த்து, தேனீ வளர்ப்பது தொடர்பாகவும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். அதேபோல கத்திரி பறிக்கவும், தக்காளி பழம் பறிக்கவும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
விவசாயம் குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தருவது காலத்தின் கட்டாயமாகும். அப்படிப்பட்ட அருமையான களப் பயணத்தை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}