சிவகங்கை: குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள். தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்டன் பெற்றோர்கள்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நிழல் இல்லாத நாளை பார்த்து அதன் அறிவியல் விவரங்களை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்து கூறினார்கள். தங்களை சுற்றியுள்ள பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும்,உறவினர்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கி கூறினார்கள்.

நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி , முத்துமீனாள் ஆகியோர் மாணவர்களுக்கு கொடுத்த தகவலில், பூஜ்ஜிய நிழல் தினம் ஆண்டிற்கு இரண்டு முறை வரும்.சூரியனின் வீழ்ச்சி அட்ச ரேகைக்கு சமமாக மாறும் போது பூஜ்ஜிய நிழல் நிகழ்ச்சி நடக்கிறது. சூரிய கதிர்கள் தரையில் உள்ள பொருட்களில் செங்குத்தாக விழும் . அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும். இந்த ஆண்டு பூஜ்ஜிய நிழல் தினம் அன்று நாம் நின்றால் சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரியும் பக்கத்தில் நிழலாக தெரியாது.

இதனை கருத்தில் கொண்டு மாணவிகள் ரித்திகா, நந்தனா, லேகாஸ்ரீ, ஸ்டெபி ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர். தங்களின் நிழல் தங்களுக்கு தெரியாததை கண்டு ஆச்சிர்யப்பட்டனர். தங்களுடன் படிக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்து கூறினார்கள்.தங்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}