சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படிப்பிடிப்பு தேனி, மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனால் படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே தேதியில் நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அட்லி திரைப்படமும் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இட்லி கடை படத்தின் டீசர் மட்டும் வெளியாகவில்லை. ஏனெனில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் 10 சதவிகிதம் இருப்பதால் பட ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தகவல் வெளியானது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது. ரசிகர்கள் ஏமாற்றத்துடன், அடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர்.
இந்த நிலையில் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் பத்தாம் தேதிக்கு பதிலாக வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.

முன்னதாக, தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ்க்குப் பிறகே இட்லி கடை திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}