Copyrights case... நடிகர் தனுஷ் நயன்தாரா மீது தொடர்ந்த வழக்கு.. ஜனவரி 8ல் இறுதி விசாரணை

Dec 12, 2024,03:26 PM IST

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த காப்பிரைட் மீறல் வழக்கில் ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நயன்தாராவின் சிறு வயது முதல் இன்றுவரையிலான நயன்தாரா வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஆவணப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில், நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி கடந்த 18ம் தேதி 'beyond the fairytale' என்ற தலைப்பில் வெளியானது. இதில் நயன்தாரா- விக்னேஷ் சிவனுடனான வாழ்க்கை பற்றி விரிவாக காண்பிக்கப்பட்டது.




இந்த ஆவண படம் குறித்து, நடிகர் தனுஷின் வொண்டர் பார் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து நடிகர் தனுசுக்கு எதிராக அறிக்கை ஒன்றை நயன்தாரா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். 


இந்நிலையில், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ்சின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நயன்தாரா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. 


இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

news

மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு

news

மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?

news

பாட்டியானாலும் பிரச்சினை!

news

"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!

news

புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!

news

நான் கம்ப்யூட்டர் கற்ற கதை

news

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.. அப்படீன்னா அர்த்தம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்