டில்லி : இந்தியா கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் கேசி தியாகி தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த தியாகி, இந்தியா கூட்டணியை ஆரம்பித்து வைத்ததே நிதிஷ்குமார் தான். அரசியல் ரீதியாக காங்கிரஸ் ஒட்டாமல் இருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தது நிதிஷ் குமார் தான். நிதிஷ் குமாரை தான் பிரதமராக்க வேண்டும் என அனைத்து தலைவர்களும் விரும்பினார்கள். ஆனால் அசோகா ஓட்டலில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நிதிஷ்குமாரை பிரதமராக ஏற்கவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளியாகி பிறகு நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக இந்தியா கூட்டணி சார்பில் பேரம் பேசப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, போன் கால்கள் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. ஆரம்பம் முதலே இந்தியா கூட்டணியில் காங்கிரசின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. வெளிப்படையாக தான் எங்கள் கட்சி தலைவர்களிடம் பேரம் பேசப்பட்டது. இந்தியா கூட்டணியை தங்கள் வசப்படுத்த ஆரம்பம் முதலே காங்கிரஸ் முயற்சி செய்து வந்தது என தெரிவித்தார்.
தியாகியின் இந்த பேட்டி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அது போல் எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. எங்கள் கூட்டணி சார்பில் அப்படி எந்த பேரமும் பேசப்படவில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மோடி 3.ஓ... புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு.. தெலுங்கு தேசத்துக்கு எத்தனை?
மத்தியில் பாஜக, காங்கிரஸ் யார் ஆட்சி அமைத்தாலும் கிங் மேக்கராக இருக்க போவது நிதிஷ்குமார் தான். இரு தேசிய கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் அதற்கு நிதிஷ்குமாரின் ஆதரவு கண்டிப்பாக தேவை. ஆனால் நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து அனைத்து ஊகங்களுக்கும் முடிவு கட்டி விட்டார். நாளை பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் மோடி.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}