டெல்லி : நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜூன் 09) பதவியேற்க உள்ளார். அவரது தலைமையில் அமைய போகும் மத்திய அமைச்சவையில் யாருக்கு எல்லாம் வாய்ப்பு உள்ளது என்பது என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளது. பாஜக ,லோக்சபா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடி தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகிறது.

நிதின் கட்காரி - ராஜ்நாத் சிங்
இதுவரை வெளியான தகவல்களின் படி புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவையில் பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்களுக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்ற தகவல் இதுவரை ரகசியாகவே வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பியூஷ் கோயல், நாராயண் ரானே உள்ளிட்டோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை நிதின் கட்காரிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை பியூஷ் கோயலுக்கும் வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு கூடுதலாக உணவு பாதுகாப்புத்துறை, ஜவுளித்துறை, பொது விநியோகமும் உள்ளிட்ட துறைகளும் அவருக்கு வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மோடி 2.ஓ அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் அதே பதவி கொடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தெலுங்கு தேசத்திற்கு 4

இதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவியும், ஒரு இணையமைச்சர் பதவியும் கொடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கும் 2 மத்திய அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக லாலன் சிங், சஞ்சய் ஜா மற்றும் ராம் நாத் தாகூர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மற்றவர்களுக்கு ஆளுக்கு 1
இதே போல் லோக் ஜனசக்தி மற்றும் பீகாரின் இந்துஸ்தான் அவாமி மோர்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கும் தலா ஒரு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவ சேனாவிற்கு இணையமைச்சர் பதவி, அஜித் பவார் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுப்பதாக பாஜக உறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
உ.பி., மாநிலத்திற்கு இரண்டு அமைச்சர் பதவிகளும், தெற்கில் கர்நாடகாவின் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அரியானா மாநிலத்தில் இருந்து இந்தர்ஜித் சிங்கிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}