சென்னை: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகள் குறித்து மகாவிஷ்ணு பேசியது என்னை காயப்படுத்தியது என சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆன மகா விஷ்ணு கலந்து கொண்டார்.

அப்போது முற்பிறவி, பாவ புண்ணியம், மறு ஜென்மம் என மாணவர்கள் மத்தியில் மூட நம்பிக்கைகள் எழும் வகையில் அவர் பேசியுள்ளார். மேலும் மாற்றுத்திறனாளி குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பிரளயம் போல வெடித்ததைத் தொடர்ந்து அரசு தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியை தமிழரசி திருவள்ளூர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேபோல சைதாப்பேட்டை மாடல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் என்பவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பார்வை மாற்றுத் திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர், மகாவிஷ்ணு நடந்தது குறித்து விளக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியின்போது கூறுகையில், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத, முப்பிறவி பாவ புண்ணியம் என அவர் பேசியது எனக்கு பிடிக்கவில்லை. முன் ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் கையில்லாமல் காலில்லாமல் பிறக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் குறித்து அவர் பேசி இருக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியது என்னை காயப்படுத்தியது.
முற்பிறவியில் நாம் என்ன செய்தோம் என்று யாருக்கும் தெரியாது. முற்பிறவி இருந்ததா என்பதே தெரியாதே. அது உண்மையானதா என்பதும் தெரியாது. பள்ளிக்கூடம் என்பது சமத்துவமான இடம். இங்கு குறிப்பிட்ட மாதம் சார்ந்து பேசுவது அனுமதிக்க முடியாது.
நான் கேள்வி கேட்டதுமே என் பெயர் என்ன, என் மதம், சாதி குறித்து அறிய அவர் தீவிரம் காட்டினார். ஆனால் அதை நான் வெளிப்படுத்தவே இல்லை என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
99% பாட்டாளி மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ்
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!
காதல்!
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
{{comments.comment}}