திண்டுக்கல்: அண்ணாமலைதான் வருங்கால முதல்வர் என்று பாஜகவினர் சொல்லி வந்தனர். அதை ஏற்க நாம் என்ன இளிச்சவாயர்களா.. இதனால்தான் ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரிடம் புகார் கூறி விட்டு கூட்டணியை விட்டு தைரியமாக வெளியே வந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் மாவட்டம் தங்கச்சியம்மாபட்டியில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, அதிமுக - பாஜக கூட்டணி முறிய என்ன காரணம் என்பது குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டார். இது அதிமுக, பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சிலிருந்து:

முதல்வர் பதவியை வகிக்க எடப்பாடியாருக்கு முழுத் தகுதி உண்டு என்று நாம் சொல்லி வந்தோம். பாஜகவைப் பொறுத்தவரை அடுத்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த முதல்வர் தகுதி அண்ணாமலைக்கு உண்டு என்று சொல்லி வந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா.
பழனிக்கு வேண்டுமானால் காவடி தூக்கலாம். அண்ணாமலைக்கு எப்படி தூக்க முடியும்?. எடப்பாடியார்தான் முதல்வர் என்று நாம் சொல்லி வந்தபோது, அவருடன் கூட இருந்தவர்கள், வாழ்க அண்ணாமலை, வருங்கால முதல்வர் அண்ணாமலை என்று கோஷம் போட்டால் நாம் என்ன இளிச்சவாயர்களா?
இதையடுத்தே ஜே.பி. நட்டா, அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து புகார் கூறினோம். அதன் பிறகு தைரியமாக, ஆனந்தமாக, வீரத்தின் விளை நிலமாக பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற முடிவை எடப்பாடியார் எடுத்தார் என்று கூறியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
அதிமுக - பாஜக கூட்டணி லோக்சபா தேர்தலில் தொடருமா என்ற சின்ன நப்பாசை சிலரிடம் இருந்து வருகிறது. ஆனால் அதிமுக தலைவர்களும், பாஜக தரப்பில் ராம சீனிவாசன் போன்றவர்களும் பேசி வருவதும், பேட்டி தருவதையும் பார்த்தால் அதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே போவது போலத்தான் தெரிகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலை தரப்பு மறுத்ததால்தான் கூட்டணியை முறித்ததாக திண்டுக்கல் சீனிவாசன் தேங்காய் உடைப்பது போல கூறியிருப்பது புதிய சலசலப்பை ஏற்படுத்துள்ளது.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}