ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

Nov 09, 2024,04:01 PM IST

சென்னை: பார் போற்றும் சிறந்த திரைப்பட இயக்குனர் பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா உள்ளிட்ட  பல்வேறு முக்கியப் பிரபலங்களும்ா கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.


தமிழ் சினிமாவில் முதல் முதலில் கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது  சினிமா பயணத்தை தொடங்கிய பீம்சிங், படிப்படியாக தனது விடாமுயற்சியால் உயர்ந்து சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கும் இயக்குனராக உருவெடுத்தார். 




பீம்சிங் என்றாலே டக்கென நினைவுக்கு வருவது அவர் இயக்கத்தில் வெளியான ப வரிசை படங்கள் தான் நினைவுக்கு வரும். அவர் இயக்கிய அத்தனைப் படங்களும் இன்றும் திரை உலகின் பாடங்களாக இருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மட்டும் வைத்து 19 படங்களை இயக்கியுள்ளார் பீம்சிங். அதிலும் குறிப்பாக பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, உள்ளிட்ட பல்வேறு ப வரிசை படங்கள் மிகப் பிரபலமானஇவை. 


பீம்சிங் இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளை எதார்த்தமாக பிரதிபலிக்கும் கதை அம்சமாகவே இருக்கும்.  அன்பு, பாசம், மதம், மனித உணர்வு, மனித நேயம், சகோதரத்துவம், உறவுகளின் உன்னதம் உள்ளிட்ட குடும்ப பாங்கான கதை அம்சங்களை ஒவ்வொரு படத்திலும் பீம்சிங் பிரதிபலித்துக் கொண்டே இருந்தார் என்றால் அது மிகையல்ல. படம் என்றாலே குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும்படி அமைய வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டே இவர் படம் இயக்கியதாலதான் இவை சாத்தியமாகின. 


1960 ஆம் ஆண்டு ஏவி.எம். ப்ரொடக்ஷனில் பிரகாஷ்ராவ் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்று விட்டது. இதையடுத்து அந்தப் படத்தை பீம்சிங் இயக்கி முடித்து வெளியானது. படம் மிகப் பெரிய ஹிட்டும் கொடுத்தது.. அதுதான் களத்தூர் கண்ணம்மா. கமல்ஹாசன் அறிமுகமான படம் அது. அந்தப் படத்தை மேலும் செம்மைப்படுத்தி, வசனங்களை மெருகேற்றினார். இதனால்தான் இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 


சிவாஜி கணேசன் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பின்னாளில் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹீரோவாக மாறிய உலக நாயகன் கமல்ஹாசனும் கூட பீம்சிங் மூலமாகவே நமக்குக் கிடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, என நான்கு மொழிகளிலும் பல்வேறு வெற்றி படங்களை தந்த முதல் வெள்ளிவிழா இயக்குனரும் இவரே. அதேபோல் இவர் தமிழ் படங்களை முதன் முதலில் இந்தி மொழிக்கு எடுத்துச் சென்று வெற்றிப் பாதையை வகுத்தவர். பல உதவியாளர்களை இயக்குனர்களாக தயாரிப்பாளராகவும் உயர்த்தியவர். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர். தற்போது வரை மக்கள் போற்றப்படும் இயக்குனர் ஆவார். 


இந்த நிலையில் தமிழ் சினிமாவில்  சிறந்த பங்களிப்போடு பல்வேறு குடும்பப் பாங்கான படங்களை இயக்கிய பீம்பாய் என்ற பீம்சிங்கை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் பீம்சிங் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா நாளை மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  ரஷ்ய கலாச்சார மையத்தில்,  நடைபெறுகிறது. 


இதில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.வி உதயகுமார், பொதுச் செயலாளர் மா.பேரரசு, பொருளாளர்  சரண், இயக்குனர் இமயம் பாரதிராஜா, திரைக்கதை மன்னன் பாக்கியராஜ், என்றும் மார்க்கண்டேயன் சிவக்குமார், இளைய திலகம் பிரபு, பீம்சிங் குடும்பத்தார்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்