சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தவெக கட்சி தலைவர் விஜய் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் Uncle என கூறியது பற்றி டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் தவெக கட்சியின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் பேசிய விஜய் வழக்கம் போல் திமுக மற்றும் பாஜக கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். அதோடு பிரதமர் மோடிக்கு சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதே போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சில கேள்டிகளை எழுப்பினார். அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், கமல் என மற்ற கட்சிகளையும் மறைமுகமாக தாக்கி பேசினார்.
விஜய் மாநாட்டில் பேசியது குறித்து பல்வேற கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வந்தனர். மாநாட்டில் விஜய் பேசும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை Uncle என குறிப்பிட்டார். இதை பலரும் விமர்சித்தனர். சிலர் இதில் என்ன தவறு உள்ளது என ஆதரவாகவும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மாநாட்டில் விஜய் பேசியது குறித்து பிரபல சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், "விஜய் குறை சொல்லும் நோக்கத்தில் Uncle என சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. நேரில் பார்த்தால் கூட, 'நல்லா இருக்கீங்களா Uncle?' என்றே கேட்பார் விஜய். அதையே பொது வெளியில் Commercial செய்து பேசியுள்ளார். ஆனால் அந்த வார்த்தையை வேறு மாதிரி எடுத்துக்கொண்டு, சிலர் பேசுகின்றனர். நாட்டுக்கு என்ன தேவையோ, நல்லதோ அதை பாருங்கள், செய்யுங்கள். நானே கூட ரெட் ஜெயிண்ட்ஸ்க்கு படம் செய்த காலத்தில், அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் சார்-ஐ அவர் வீட்டில் சந்திக்கையில் Uncle என்றும், அவர் மனைவியை Aunty என்றும் கூப்பிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!
கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!
கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!
வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
{{comments.comment}}