சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவுக்கு பிரேக் விடுவதாக அறிவித்துள்ளார். தனது புதிய படத்தில் கவனம் செலுத்தப் போவதால் இந்த பிரேக் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியிலிருந்து மீண்டு, தனது சொந்த படக் கம்பெனியை சமீபத்திதல்தான் அறிவித்தார். ஜி ஸ்குவாட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக பிளைட் கிளப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. உறியடி நாயகன் விஜயக்குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்துக்குத் தயாராகவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதற்கான பூர்வாங்க வேலைகளில் அவர் ஈடுபடவுள்ளார். ஸ்கிரிப்ட் ரெடி செய்வது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்ததத் திட்டமிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என்று பிரமாண்ட வெற்றிகளைக் கொடுத்து விட்ட லோகேஷ் கனகராஜ், ரஜினி படத்தை மிகப் பிரமாண்டமான வெற்றியாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார். இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே வசூல் மற்றும் ஆக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இது இருக்கும் என்றும் எல்லோரும் நம்புகிறார்கள்.
இந்த நிலையில் தனது புதிய படத்தின் வேலைகளுக்காக சோசியல் மீடியாவிலிருந்து விலகி இருக்கப் போவதாகவும், போன் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இதுவரை என் மீது காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. மீண்டும் சந்திக்கலாம். அதுவரை அனைவரும் நேர்மறையான உணர்வுகளைப் பரப்புங்கள், பகிருங்கள் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}