விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி பகுதியில் உள்ள 36 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர், தனது சொந்த படக் கம்பெனியை சமீபத்தில்தான் அறிவித்தார். ஜி ஸ்குவாட் என்ற பெயரிலான அந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக பிளைட் கிளப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. உறியடி நாயகன் விஜயக்குமார் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்துக்குத் தயாராகவுள்ளார் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ என்று பிரமாண்ட வெற்றிகளைக் கொடுத்து விட்ட லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் படத்தை மிகப் பிரமாண்டமான வெற்றியாக மாற்றுவதில் ஆர்வமாக உள்ளார்.

இதுவரை வந்த ரஜினி படங்களிலேயே வசூல் மற்றும் ஆக்கத்தில் மிகப் பிரமாண்டமாக இது இருக்கும் என்றும் எல்லோரும் நம்புகிறார்கள். இந்த நிலையில் தனது புதிய படத்தின் வேலைகளுக்காக சோசியல் மீடியாவிலிருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ், இன்று திடீர் என்று விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் செய்தார். அடுத்த படத்திற்காக தயாராகும் இயக்குனர் சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}