சென்னை: சாதிய வன்கொடுமைகளை தடுக்க தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இயக்குனர் பா ரஞ்சித் கேள்வி எழுப்பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு க ஸ்டாலின் நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதனை வீடியோ பதிவேற்றம் செய்து வெளியிட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், தலைவர் என்றும், முதல்வர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர் என்றும் அழைக்கிறார்கள்.

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டு, மத்திய பட்ஜெட், கல்வி, கூட்டணி கட்சிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான முதல்வரின் பதில்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது .
தமிழ் சினிமாவில் அட்டகத்தி மெட்ராஸ் கபாலி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற பா ரஞ்சித் முதல்வர் பேசிய இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, சாதிய கொடுமைகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் அவர்களே..
தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம் என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
{{comments.comment}}