சென்னை: புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்டதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தற்போது lik என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இப்படத்திற்கு முதலில் எல்ஐசி என பெயரிட்டு இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயருக்கு எல்ஐசி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் எல்ஐசி என்ற பெயர் தற்போது எல்ஐகே என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஹீரோவாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். சமீபத்தில் படத்தோட ஷூட்டிங்காக புதுச்சேரிக்கு சென்றபோதுதான் புதுச்சேரி முதல்வரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் விக்னேஷ் சிவன் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு எதற்கு என்பது குறித்து இணையதளத்தில் பல்வேறு வதந்திகள் கிளம்பியது.
அதாவது புதுச்சேரி அரசு்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்க இருப்பதாகவும், இதற்காக அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வரை சந்திக்க வந்ததாகவும் விக்னேஷ் சிவன் சார்ந்து பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகி வந்தன. குறிப்பாக விக்னேஷ் சிவனுக்கு அரசு ஹோட்டலை வாங்கும் அளவிற்கு பணம் கொட்டி கிடைக்கிறதா என சோசியல் மீடியாவில் பலர் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி விமான நிலையத்தை பார்வையிட்டு அங்கு எல்ஐகே படத்தின் படப்பிடிப்பை நடத்துவதன் மூலம் அனுமதி கேட்கவே புதுச்சேரிக்கு சென்றேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதல் அமைச்சரையும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்.
என்னுடன் வந்த உள்ளூர் மேனேஜர் ஒருவர் அவருக்கு தேவைப்பட்ட விஷயம் தொடர்பாக அப்போது விசாரித்தார். இந்த நிகழ்வு தவறுதலாக என்னுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பகிரப்படும் மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகள். நகைச்சுவையாக உள்ளது. ஆனால் தேவையற்றது என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 08, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
{{comments.comment}}