சென்னை: திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியாளராக ஆர். சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்ட கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.

கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ் குமார் நியமனம். விழுப்புரம் மாவட்டம் கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் கலெக்டராக மோகன சந்திரன் நியமனம். திண்டுக்கல் கலெக்டராக பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்.
தர்மபுரி கலெக்டர் சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம். நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி லலித் ஆதித்யா நீலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
மரமா பாறையா!
தூத்துக்குடி முத்து போல!
How Can We Motivate Children to Discover Their Skills?
World Food Day: ஒவ்வொரு பருக்கை உணவும் முக்கியம்.. வீணடிக்காதீர்கள்!
கருவறைப் பூக்கள்
எதிர்கால தலைமுறைக்கு பசுமை நிறைந்த உலகை விட்டு செல்வோம்!
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
{{comments.comment}}