சென்னை: மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தியானத்தில் அமர்ந்தார் கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.
18வது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளிகி வருகின்றன. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளில் 298 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் 228 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில், விஜபி தொகுதியான விருதுநகரில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனும், திமுக சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் ஒட்டுகள் பிரிந்து மும்முனை போட்டிகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்திலேயே ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்தார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார். அதன் பின் பின்னடைவு, முன்னிலை என மாறி மாறி வருவதால், தேமுதிகவினர் கலக்கம் அடைந்தனர். தற்பொழுது விருதுநகர் தொகுதியில் 2 முனை போட்டி மட்டுமே நிலவி வருகிறது. வெற்றி பெற போதுவது யார்? திமுகவா? தேமுதிக? என்ற இழுபறி நிலை உருவாகி வருகிறது.

இந்த நிலையில், விருதுநகரில் 7வது சுற்று முடிவில் தேமுதிக கட்சி விஜய பிரபாகரன் 1,36,198 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மாணிக்கம் தாக்கூர் 1,35,479 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் 466 வாக்குகள் வித்தயாசத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் விஜயபிரபாகரனின் தாய் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விஜயகாந்த் சமாதியில் உட்கார்ந்து தியானம் செய்து வருகிறார். மகன் பெற்றி பெற வேண்டும் என்பதற்காக தியானத்தில் இறங்கியிருப்பதால் அவருடன் கட்சியினரும் அமர்ந்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}