திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது

Mar 24, 2026,06:22 PM IST

சென்னை : திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக.,விற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது தொடர்பாக இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு :


தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் இதில் தங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்ற முடிவில் தேமுதிக உள்ளது. இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக.,விற்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டு விட்டது. அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் ஏற்கனவே ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார். இதனால் சட்டசபை தேர்தலில் தேமுதிக.,விற்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்க போகிறது என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.


தேமுதிக எதிர்பார்பு என்ன?




தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று இரவு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளார். திமுக தரப்பில் 10 முதல் 12 சீட்களை கேட்டுப் பெற தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, ரிஷிவந்தியம், திருப்பரங்குன்றம், விருதுநகர் உள்ளிட்ட தொகுதிகளை திமுக தலைமையிடம் கேட்டுப் பெறவும் தேமுதிக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் 5 முதல் 6 சீட்கள் மட்டுமே தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 


இன்று ஒப்பந்தம் கையெழுத்து?


இருந்தாலும் இரு தரப்பு கட்சிகளும் இன்றே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி, ஒப்பந்தம் கையெழுத்திட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரமும், செல்வாக்குள்ள தொகுதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் தேமுதிக தரப்பு பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதனால் திமுக தலைமை தேமுதிக.,விற்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க போகிறது என்பதை தெரிந்த கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


தேமுதிக கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றிருந்தாலும் ஒரு காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த கட்சி அது. விஜயகாந்திற்காக தேமுதிக.,விற்கு வாக்களிக்கும் மக்கள் இன்றும் அதிக அளவில் இருப்பதால் அதை கருத்திக் கொண்டு, தாங்கள் முடிவு செய்திருப்பதை விட கூடுதலாக சில தொகுதிகளை தேமுதிக.,விற்கு திமுக தலைமை ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்