சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று அறிவித்த போதிலும் நாள்தோறும் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து, போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருவது தொடர் கதையாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மான விவரம்:
தீர்மானம் 1:
முன்னாள் பாரத பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கும், புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி அவர்கள் மறைவிற்கும், தேமுதிக நாமக்கல் தெற்கு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ராமலிங்கம் அவர்கள் மற்றும் மறைந்த கழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தீர்மானம் 2:
கழகத்தின் கொடி நாள் 12.2.2025ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கிராமந்தோறும் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 3:
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஞானசேகரனை வன்மையாக கண்டிப்பதோடு, தவறு செய்தவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாலும் அந்த சார் யார் என்று இன்னும் கண்டுபிடித்து தெரியப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக ஞானசேகரனுக்கு உதவிய சாரை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 4:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் என்று அறிவித்த போதிலும் நாள்தோறும் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. இதனால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சாலை விபத்து, போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருவது தொடர் கதையாக இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக மது மற்றும் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 5:
கடலோரம் வாழும் மீனவர்கள் தங்கள் பிழைப்பிற்காக, மீன் பிடி தொழிலை செய்து வருகிறார்கள். கடலில் மீன் பிடிக்கும் பொழுது எல்லை தாண்டி விட்டதாக கூறி மீனவர்களை கைது செய்வதோடு இல்லாமல் துப்பாக்கியால் சுட்டு இலங்கை கடலோர காவல் படையினர் மீனவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 6:
தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற திமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் (தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி, வேலூர்,) கனிமவளங்களை மற்றும் மணல் கொள்ளை போன்ற கனிம வளங்களை பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திராவிற்கு கடத்திக் கொண்டிருக்கின்றனர். இதை வன்மையாக தேமுதிக சார்பில் கண்டிக்கிறோம். இது போதாது என்று திமுக அரசு மீண்டும் 13 மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க தேர்வு செய்திருப்பதை தேமுதிக கண்டிப்பதோடு இல்லாமல், தேர்வு செய்த மணல் குவாரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 7:
தஞ்சை, மயிலாடுதுறை, மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் மத்திய மாநில அரசுகள் இரண்டு மாதமாக நிவாரணத் தொகை வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 8:
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களுக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடி கேப்டன் உருவப்படம் நிறுவிய தேர் ஒன்றை தயாரித்துள்ளார்கள். தேரை ஒரு மாதத்திற்கு பிறகு கேப்டன் ஆலயத்தில் நேரடியாக ஒப்படைக்க உள்ளார்கள். கேப்டன் மீது பற்று வைத்து தேரை தயாரித்த இலங்கையில் வாழும் தமிழ் பெருமக்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் அண்ணியார் சார்பாகவும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பாகவும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் 9:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையில் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே அந்த செயலை செய்ததாக மூன்று பேரை கைது செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவத்தை காவல்துறை திசை திருப்ப முயற்சி செய்கிறது என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து சிபிஐ விசாரணை வேண்டும். என தேமுதிக கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 10:
தமிழ்நாடு முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கின்ற சாலைகளை உடனடியாக சரி செய்து வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதிப் படி பாதுகாப்பான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 24, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}