மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.. பிரேமலதா விஜயகாந்த்

Nov 14, 2024,05:16 PM IST
சென்னை: மருத்துவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அரசின் கடமை.எந்த விதத்திலும் மக்களை பாதுகாக்கவில்லை என்றால், நிச்சயமாக மக்களின் எதிர்ப்பை இந்த ஆட்சி சந்திக்க நேரிடும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசு கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜி. இவரை விக்னேஷ்வரன் என்பவர்  சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. டாக்டர் பாலாஜிக்கு தலை, காது முதுகு உள்ளிட்ட பகுதிகளில் குத்து விழுந்துள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறி வருகிறார். கத்தியால் குத்திய விக்னேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மருத்துவர்களையும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அரசின் கடமை. எந்த விதத்திலும் மக்களை பாதுகாக்கவில்லை என்றால், நிச்சயமாக மக்களின் எதிர்ப்பை இந்த ஆட்சி சந்திக்க நேரிடும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. இன்றைக்கு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை, மீனவர்கள் போராட்டம், ஆசிரியர் போராட்டம், மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டம், மருத்துவர்கள் போராட்டம் என இப்படி ஒவ்வொரு நாளும் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

75 ஆண்டுகால ஆட்சியில் இருக்கிறோம் என்று பெருமை பேசும் திமுக, ஆட்சிக்கு வரும்போது கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய வெள்ளத்திற்கு, எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. 

கேரளாவை போல் நீதியரசர்கள், இந்த அரசு செய்யும் அத்தனையையும் சுட்டிக்காட்டி தீர்வைக் கொண்டு வர வேண்டும். மழை வெள்ளம் வருவதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கை செய்ய வேண்டியது இந்த அரசின் கடமை என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

அதிகம் பார்க்கும் செய்திகள்