சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். புதிய கெட்டப்புடன், அவர் இன்று கோவையில் பிரச்சாரம் செய்தபோது தொண்டர்கள் உற்சாகத்துடன் அவரது பேச்சைக் கேட்டனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தனது பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்து வந்தார்.
அதன்படி இன்று பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது இதில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீங்க. அதுல ஒரு விஷயம் இருக்கு. அது என்ன தெரியுமா.. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, குறிப்பாக பெண் தலைவர்களுக்கு "கெட்டப்" ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா முதல் முறை அரசியலுக்கு வந்தபோது இப்படித்தான் புதிய டிசைனில் ஒரு ஓவர் கோட் போட்டு வந்தார். அது பலரையும் கவர்ந்தது, பலரது பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்றது. நடிகையாக இருக்கும்போது பல்வேறு மாடலான ஆடைகளை, அணிந்து துள்ளலான ஆடல் பாடல், நடிப்பு என அனைவரையும் கவர்ந்தவர். அரசியல் களத்தில் இறங்கிய பின்னர் அவர் தன்னை எல்லோரும் ஒரு அரசியல் தலைவராக பார்க்க வேண்டுமே தவிர நடிகையாக பார்க்கக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் தனது டிரஸ்ஸை வித்தியாசப்படுத்தினார். அதன் பிறகுதான் அவரை அதிமுகவினர் "அம்மா" என்று அழைக்கத் தொடங்கினர்.
அவருடைய நடை, உடை, அலங்காரம் எல்லாம் அவருக்கு மரியாதை தரும் வகையில் மாற்றம் கண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் அரசியலுக்கு வந்தபோது, அவருடைய நடை உடை எல்லாம் ஜெயலலிதா போன்றே மாறியது. அந்த வரிசையில் தற்போது பிரேமலதா விஜயகாந்தும் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். விஜயகாந்த் இல்லாத சூழலில் முதல் முறையாக அவரது கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவரது கெட்டப் வித்தியாசமாக மாறிக் காணப்பட்டது. பலரையும் அது ஆச்சரியப்படுத்தியது. பிங்க் கலர் புடவையில் வந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் அணிந்திருந்த பிளவுஸ் நீளக் கை கொண்டதாக அமைந்திருந்தது. பார்க்கவே் வித்தியாசமாக, கிட்டத்தட்ட ஜெயலலிதாவைப் பார்ப்பது போல இருந்தது.
கண்ணியம் தரக் கூடிய வகையிலான இந்த உடை மூலம் பிரேமலதாவின் மதிப்பும் ஒரு படி மேலே உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா, சசிகலா வரிசையில் கெட்டப் சேஞ்ச் செய்த பெண் தலைவர்கள் வரிசையில் இப்போது பிரேமலதாவும் இணைந்து விட்டார்... மேம், இந்த காஸ்ட்யூம் உங்களுக்கு சூப்பரா இருக்கு.. அப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க பேசாம!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
{{comments.comment}}