சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.
விஜயகாந்த உடல்நலக் குறைவால் சில ஆண்டுகளாகவே வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டு வருவது வழக்கம். இந்த நிலையில், திடீர் இருமல், காய்ச்சல், சளி ஏற்பட்டு உடல் நலக்குறைவால் கடந்த 18ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த மருத்துவமனையில் இருக்கும் போது பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அதை தேமுதிக கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து மறுத்து வந்தார். மேலும், விஜயகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வெளியிட்டு, அவரது உடல் நிலை தற்பொழுது சீராக தான் உள்ளது என்று கூறி வதந்திகளுக்கு எல்லாம் முற்றுபுள்ளி வைத்தார் பிரேமலதா.

இந்நிலையில், தற்போது உடல் நிலை சீராகி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இதுதொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ நிலை அறிக்கையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அறிந்த அவரது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}