சென்னை: லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விருதுநகரில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடவுள்ளது. நேற்றே தொகுதிகள் வெளியாகிய நிலையில், இன்று தான் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் தேமுதிக இரு கட்சிகளும் முன்னாள் தலைமைகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இல்லாமல் இந்த தேர்தலை சந்திக்கின்றன.

தேமுதிக வேட்பாளர் பட்டியல் :
விருதுநகர் - விஜய பிரபாகரன்
திருவள்ளுர் (தனி) - நல்லதம்பி
மத்திய சென்னை - பார்த்தசாரதி
கடலூர் - சிவக்கொழுந்து
தஞ்சாவூர் - சிவனேசன்
ஆகியோர் தேமுதிக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாகும். இந்த தேர்தலில் விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரை எதிர்த்து விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். இவ்விருவரும் போட்டியிடுவதால் விருதுநகர் இந்த வருடம் கலை கட்டும் என தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இணையதள பக்கங்களிலும் இது குறித்த தகவல்கள் தீயாக பரவி வருகின்றது.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}