உதயநிதி பேசியதை திரித்துக் கூறுவதா.. பாஜகவுக்கு திமுக கண்டனம்

Sep 03, 2023,02:59 PM IST
சென்னை:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சை பாஜகவினர் திரித்து பொய்யான, அவதூறான செய்தியாக பரப்பி வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு, கொரனோனா போன்றது. அதைத் தடுக்க முடியாது. ஒழிக்கத்தான் முடியும். அதேபோலத்தான் சனாதனத்தையும் தடுக்க முயற்சிக்கக் கூடாது, மாறாக ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.



இந்தப் பேச்சைக் கண்டித்து பாஜகவினர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்துக்களை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாக வட மாநிலங்களில் ஒரு கருத்தை சிலர் பரப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு திமுக கடும் கண்டநம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக இணைச் செயலாளரும், தலைமைக் கழக பேச்சாளருமான வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது இந்தியாவிலிருந்து ஜாதிய அடக்குமுறைகளை ஊக்குவிக்கும் சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அவர் இந்துக்களைக் கொல்ல வேண்டும் என்று பேசியதாக  பொய்ச் செய்தி பரப்புவதையே வேலையாக வைத்திருக்கும் பாஜக தலைவர்கள் அவதூறு பரப்பி வருகிறார்கள்.

எங்களது தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து, அவர் பேசாததை பேசியதாக கூறி பொய்யான செய்திகளை பரப்பும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரதமர் சொல்கிறார்.. அதற்காக காங்கிரஸ்காரர்களைக் கொல்லச் சொல்கிறார் என்று கூற முடியுமா. அவர் இனவெறிப் படுகொலையைத் தூண்டுகிறார் என்று சொல்ல முடியுமா..  உதயநிதி ஸ்டாலின் எப்படி படுகொலை செய்யச் சொல்வார்... இது அவதூறான செயல், பொய்யான செய்தி. இதுபோன்ற வெறுப்புகளைப் பரப்புவோர் சட்டத்திற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

சனாதனம் வேண்டாம், ஒழிக்க வேண்டும் என்றால், அது ஊக்குவிக்கும் சாதிய முறைகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் என்றார் சரவணன் அண்ணாதுரை.

உதயநிதி ஸ்டாலின் உறுதி

இதற்கிடையே, தனது பேச்சை பாஜகவினர் திரித்துப் பேசுவதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் நான் இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்ததாக பாஜகவினர் குறிப்பாக பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா செய்தி பரப்பியுள்ளார். அதை திட்டவட்டமாக மறுக்கிறேன். நான் என்ன பேசினேனோ அதிலிருந்து ஒரு வார்த்தை கூட மாறவில்லை. நான் பேசியது பேசியதுதான். 

நான் பேசியது, ஜாதிய அடக்குமுறைகளை ஆதரிக்கும் சனாதன முறையை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்றுதான். இதுதொடர்பாக மேலும் விளக்கம் வேண்டும் என்றால் அம்பேத்கர், பெரியார் எழுதிய நூல்களை அளிக்க தயாராக உள்ளேன். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தாலும் நான் சந்திக்கத் தயார். சனாதன முறையால் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருவனாக, அவர்களின் பிரதிநிதியாகத்தான் நான் பேசியுள்ளேன். இதற்காக எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். வழக்கமான மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்