திருச்செந்தூர் : முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சியில் தான் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழக் கூடிய திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை கும்பாபிஷேக கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வர துவங்கினர். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க இன்று காலை 06.20 மணியளவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் 5 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டு இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசன புக்கிங் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா மக்களின், பக்தர்களின் மாநாடு. பாஜக நடத்திய மாநாடு அல்ல. முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி தான். திமுக ஆட்சியில் தான் வடபழநி, மருதமலை ஆகிய முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வரும் ஜூலை 14ம் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
திருப்புவனம் இளைஞர் கொலை : தவெக போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி
திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு... தடையை மீறி போராடுவேன்... சீமான்!
ரெட் அலார்ட்...கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்
பெங்களுருவில் இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய கும்பலால் பரபரப்பு
அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் கோவி.செழியன்!
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
வார தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு!
{{comments.comment}}