சென்னை: வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், டிட்வா புயலால் பாதிப்படைந்த அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.
பழுதடைந்த அரசு தானியக்கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான் பல டன் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போயின.

தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப்போனதைக் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், நெற்பயிர்களைப் பார்சலில் கொண்டு வந்து ஆய்வு செய்தார் முதல்வர்.
ஆய்வு செய்து பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல.
நானும் டெல்டாகாரன் என மேடையில் முழங்குவதை விட, ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது தான் சாலச் சிறந்தது என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வரும் திமுக அரசின் அலட்சியமே அக்கட்சியின் ஆட்சி அரியணைக்கு முடிவுரை எழுதப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்
தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு
ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்
சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்
பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி
Beautiful things don't ask for attention
{{comments.comment}}