சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார் என்று பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு தொடக்க நாளான ஏப்ரல் மாதம் 1 அன்று, மத்திய அரசு கொண்டு வந்த பணிபுரியும் மகளிருக்கான சக்தி நிவாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியில், 2023 ஆம் ஜூலை 13 அன்று தொடங்கப்பட்டதே தோழி விடுதி. இதற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசு ₹223 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ₹147.18 கோடி வழங்கியுள்ளது.

உண்மை நிலை இப்படி இருக்க, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், தோழி விடுதியை அடிப்படையாகக் கொண்டு, மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்திருக்கிறது என்று, பொய் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும், திமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மத்திய அரசின் நிதியில் செயல்படும் திட்டத்தை, தாங்கள் கொண்டு வந்ததாக, மற்றுமொரு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிக்கிறார்.
இப்படி ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யச் செலவிடும் நிதியில், முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தமிழக மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை சொந்தமாக யோசித்துச் செயல்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
{{comments.comment}}