தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்

Feb 11, 2026,05:13 PM IST
சென்னை:  தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அது நடக்கும் போது கண்டிப்பாக தெரிவிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை என்றும், தற்போது டெல்லியில் உள்ள பாஜக தலைமை தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார்.





இந்நிலையில், இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடக்கும்போது நான் உங்களுக்கு சொல்கிறேன். அனைத்துத் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அது அவருடைய கருத்து.

குடியரசு நாளன்று தேநீர் விருந்தில், என்னுடைய நீண்டகால நண்பர் என்ற முறையில் சுதீஷை சந்தித்து பேசிக் கொண்டிருத்தேனே தவிர கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை. தேமுதிகவுடன் கூட்டணி என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி வருவார்கள். அப்போது பார்க்கலாம்" என்று கூறினார். பிரதமர் நிகழ்வில் மேடையில் தேமுதிகவை பார்க்கலாமா? என்ற கேள்விக்கு 'பார்க்கலாம்' என்று கூறினார் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!

news

சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

அதிகம் பார்க்கும் செய்திகள்