சென்னை: அரசியல் தலைவர்களுக்கு என போராட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தானதாக இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கையை பாஜகவில் இருக்கும் தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எஃப்ஐஆர் வெளியானது தொடர்பாக திமுக.,வை மிக கடுமையாக தாக்கி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். அத்துடன் இல்லாமல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி நான் காலில் செருப்பு அணிய மாட்டேன். 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று முருகனிடம் முறையிட போகிறேன் என்று கூறியதுடன், தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதை போலத்தான் ஆம்ஸ்ட்ராங் வழக்கையும் ஊதி பெரிதாக்க நினைத்தார்கள்.அந்த கொலை சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து விஷயங்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. பொள்ளாச்சி சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் போராட்டங்கள் பெருசாக நடந்தன. ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் ஒரு மணி நேரத்துக்குள் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டது போல் தெரியவில்லை. அண்ணாமலை பதவி இல்லாமல் இருக்கிறார். மத்திய பாஜகவில் பதவி பெற வேண்டும் ஆனால், இப்படி ஒரு நேர்த்திக்கடனை செய்ய வேண்டும் என யாரோ ஒரு சாமியார் சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்டுக்கொண்டு, இந்த சூழலை பயன்படுத்தி அதனை நிறைவேற்றியிருக்கிறார்.
அண்ணாமலை வேடிக்கை காட்ட வேண்டும் என்பதற்காக தான் இதுபோன்று செய்து கொண்டிருக்கிறார். எல்லா அரசியல் தலைவர்களும் முதுகில் அடித்துக் கொள்ள முடியுமா? அவருக்கு வயது இருக்கிறது அடித்துக் கொள்கிறார். எனக்கு 78 வயதாகிறது என்னால் அடித்துக் கொள்ள முடியுமா? அரசியல் தலைவர்களுக்கு என போராட்ட வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், அண்ணாமலை செய்வது கேலிக்கூத்தானதாக இருக்கிறது. அண்ணாமலையின் நடவடிக்கையை பாஜகவில் இருக்கும் தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து.
அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் யார் கையில் இருக்கிறது. அதில் நியமிக்கப்படும் துணைவேந்தரை யார் நியமிப்பது என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்ல வேண்டும். அப்படியென்றால் மணிப்பூருக்கு எவ்வளவு போராட்டங்கள் நடத்த வேண்டும். உத்திரப்பிரதேசத்தில் தினமும் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}